முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றம் நோக்கி பேரணி ஆதரவாளர்களுடன் பாபாராம்தேவ் கைது

திங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2012      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, ஆக.- 14 - வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் கறுப்பு பணத்தை மீட்கக் கோரி பாராளுமன்றம் நோக்கி பேரணி நடத்திய பாபா ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர். இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களும் தொழில் அதிபர்களும் சட்ட விரோதமாக லட்சக்கணக்கான கோடி ரூபாயை சம்பாத்தியும் செய்து அதற்கு வரி கட்டுவதை தவிர்க்கவும் மறைத்து வைக்கவும் வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் போட்டு வைத்துள்ளனர். சுவிட்சர்லாந்து, ஜெர்மன், இங்கிலாந்து, அமெரிக்கா, மொரிஷியஸ், மாலத்தீவு மற்றும் பல நாடுகளில் பதுக்கிவைத்துள்ளனர். வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் கறுப்புப்பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவரக்கோரி முதலில் பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மத்திய அரசை வலியுறுத்தினார். இதற்கு மத்திய அரசு சாக்குப்போக்கு சொல்லி வந்தது. இந்தநிலையில் வெளிநாடுகளில் கறுப்புப்பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர் பட்டியலை மத்திய அரசுக்கு ஜெர்மன் அரசு ரகசியமாக அனுப்பியது. அதை வெளியிட வேண்டும் என்றும் மத்திய அரசை எல்.கே.அத்வானி கோரிவந்தார்.இதையெல்லாம் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இந்தநிலையில் நாட்டில் கறுப்புப்பணத்தை ஒழிக்கவும் ஊழலை ஒழிக்க பாராளுமன்றத்தில் வலுவான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி பிரபல காந்தீயவாதியான அண்ணா ஹசாரே குழுவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கும் மத்திய அரசு செவிசாயிக்கவில்லை. அதனால் ஊழலை எதிர்த்து அரசியல் ரீதியாக போராடப்போவதாகவும் ஹசாரே குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்பு பணத்தை மீட்கவும், ஊலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை விரைவில் நிறைவேற்றக் கோரியும் யோகா மாஸ்டர் பாபா ராம்தேவ் கடந்த 9ம் தேதி முதல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.    இந்நிலையில் மத்திய அரசை கண்டித்து பாராளுமன்றத்திற்கு வெளியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக ராம்தேவ் நேற்று காலை அறிவித்தார். இதைத்தொடர்ந்து அவர் தனது ஆதரவாளர்களுடன் பாராளுமன்றம் நோக்கி ஊர்வலமாக சென்றார். அவர்களின் ஊர்வலம் ரஞ்சித்சிங் மேம்பாலத்தை அடைந்த போது ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர். இந்த பாலமானது பாராளுமன்றத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.  அவர்கள் அனைவரும் ஏராளமான பஸ்கள் மூலம் பவானாவில் உள்ள ராஜீவ்காந்தி அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
 டெல்லி நகருக்குள் நுழைய முயன்ற ராம்தேவின் ஆதரவாளர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். முன்னதாக தனது ஆதரவாளர்களிடையே பேசிய ராம்தேவ், கறுப்புப்பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக எனது போராட்டம் தொடரும் என்றார். நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வேலையை ஒரு நாள் மட்டும் ஒதுக்கிவைத்துவிட்டு எனது போராட்டத்திற்கு ஒரு நாள் மட்டும் போராட்டம் நடத்தினால் எனது போராட்டம் மிகப்பெரியதாகிவிடும் என்று கேட்டுக்கொண்டார்.  ராம்தேவின் போராட்டத்திற்கு பா.ஜ.க., ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதா தளம், சிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ராம்தேவுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ராம்தேவின் அரசியல் பிரவேச முகமூடி அவரது போராட்டத்தின் மூலம் கிழிந்துவிட்டது என்று காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான ஜனார்த்தன் திவேதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago