முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் வெல்லாததது எனக்கு வருத்தம் அளிக்கிறது - மேரிகோம்பேட்டி

புதன்கிழமை, 15 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி, ஆக. - 15 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்க ம் வெல்லாதது எனக்கு வருத்தம் அளிக் கிறது என்று இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான மேரிகோம் தெரிவி த்தார்.  லண்டன் ஒலிம்பிக் போட்டியில் மகளி ருக்கான குத்துச் சண்டைப் போட்டியி ல் இந்தியாவின் முன்னணி வீராங்க னையான மேரிகோம் வெண்கலப் பத க்கம் வென்று நாட்டிற்கு பெருமை சே ர்த்தார்.  இந்தப் பதக்கம் அவருக்கு பெயரையும் புகழையும் ஏற்படுத்தி உள்ளது. அவரது புகழ் வானை எட்டியுள்ளது. மகளிர் குத்துச் சண்டையில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.  ஆனால் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரிகோம் அரை இறுதியி ல் தோல்வி அடைந்தது குறித்து வருத் தம் தெரிவித்தார்.  இன்னும் நன்கு சண்டையிட்டு இருந் தால் வெள்ளி அல்லது தங்கத்தை கைப் பற்றி இருக்கலாம் என்றும், ஆனால் அரை இறுதியில் ஏற்பட்ட குழப்பமே தனது தோல்விக்கு காரணமாக அமைந்தது என்றும் அவர் கூறினார். லண்டனில் இருந்து திரும்பிய மேரி கோமிற்கு தலைநகர் டெல்லியில உற் சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப் போது நிருபர்களைச் சந்தித்த மேரி மே ற்கண்டவாறு தெரிவித்தார். லண்டன் ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச் சண்டை முதன் முறையாக அறிமுகப் படுத்தப்பட்டது. இதில் மேரிகோம் 51 கிலோ பிளை வெயிட் எடைப் பிரிவில் பங்கேற்று சிறப்பாக சண்டையிட்டார்.  5 முறை உலக சாம்பியன் பட்டம் வெ ன்ற மேரிகோமை சர்வதேச குத்துச் சண்டை சங்கம் மேக்னிபிசன்ட் மேரி என்று பாராட்டி இருந்தது குறிப்பிடத் தக்கது. லண்டன் ஒலிம்பிக்கில் குத்துச் சண்டை ப் பிரிவில் 7 பேர் பங்கேற்றனர். இதில் 6 பேர் ஆடவர்கள். இதில் பங்கேற்ற ஒரே ஒரு வீராங்கனை மேரிகோம் மட்டுமே.  மகளிர் குத்துச் சண்டையில் ஒலிம்பிக்கி ல் வெண்கலம் வென்றதன் மூலம் மேரி கோம் இந்திய வரலாற்றில் புதிய சாத னை  படைத்தார். ஆனால் வெண்கலப் பதக்கம் அவருக்கு திருப்தி அளிக்கவி ல்லை.  ஒலிம்பிக் குறித்து மேரிகோமிடம் கே ட்ட போது, ஒலிம்பிக்கில் மகளிர் குத் துச் சண்டையில் பதக்கம் வென்ற முத ல் இந்திய வீராங்கனை என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் தங்கம் வெல்லாதது எனக்கு வருத்தம் அளிக்கிறது. அரை இறுதியில் எனக்கு என்னவாயிற்று என்றே தெரியவில்லை. எனது உடலை சரியாக அசைக்க முடியவி ல்லை. நான் நினைத்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. நான் மிகுந்த குழப்பம் அடைந்தேன் என்று 29 வயதான மேரி தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்