எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போடி, ஏப்.- 5 - மக்கள் வெள்ளத்தில் மிதந்த ஜெயலலிதா, போடியில் அ.தி.மு.க வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். நேற்று ஜெயலலிதா அ.தி.மு.க கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஆண்டிபட்டி, நத்தம், போடி, மதுரை புறநகர் பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். மாலை 4.05 மணியளவில் போடியில் அ.தி.மு.க வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார்.அப்போது அவர் பேசுகையில், கருணாநிதியிடமிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும். அதற்கு உங்களுக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பு இந்த தேர்தல். சுதந்திரப் போராட்டத்தின் போது வெள்ளையனே வெளியேறு போராட்டம். இப்போது கொள்ளையனே வெளியேறு போராட்டம் நடக்கிறது. கடந்த 5 ஆண்டுகால சாதனை என்பது ரூ,1 லட்சம் கோடி கடனாளியாக்கியதுதான். தன் குடும்பத்தை கோடீஸ்வரர்களாக்க திட்டங்களை தீட்டி பேராசை கொண்டவராக கருணாநிதி செயல்பட்டார்.
போடி தொகுதியில் உள்ள பிரச்சனைகளை நான் அறிவேன். எம்.ஜி.ஆரின் நல்லாசியுடனும், உங்கள் பேராதரவுடனும் மீண்டும் கழக ஆட்சி அமைந்தவுடன் போடியில் பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும். அரசு மருத்துவமனை நவீனப்படுத்தவும், விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். குரங்கணியையும், கொட்டகுடியையும் சுற்றுலாத்தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். போடியில் புதிய குளிர்சாதன கிடங்கு அமைக்கப்படும். போடி பகுதியில் 5146 ஏக்கர் நிலத்திற்கு இருபோகம் பாசன வசதி ஏற்படுத்தப்படும். கொம்புதூக்கி அணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
போடி வந்த ஜெயலலிதாவை அ.தி.மு.க வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தே.மு.தி.க வேட்பாளர் முருகேசன், தேனி மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை மாவட்டச் செயலாளர் ரவீந்திரநாத், ஓ.பன்னீர்செல்வம் மகன் ஜெய்பிரதீப், தேனி எம்.எல்.ஏ கணேசன், சினி முருகேசன், சிறுபான்மை பிரிவு மாவட்டச்செயலாளர் ஜின்னா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஜெயலலிதாவை வரவேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


