முக்கிய செய்திகள்

கருத்துக்கணிப்புக்கு தேர்தல் ஆணையம் தடை

செவ்வாய்க்கிழமை, 5 ஏப்ரல் 2011      தமிழகம்
piraveen kumar1 2

சென்னை,ஏப்.- 5 - தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.  இந்த தடை அசாமில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கும் நேற்று முதல் 10 ம் தேதி வரை அமுலில் இருக்கும். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் 11 ம் தேதி மாலை 5 மணி முதல் வாக்குப் பதிவு முடிவடையம் 13 ம் தேதி மாலை 5 மணி வவை கருத்துக் கணிப்புகளை வெளியிடக் கூடாது. இதை தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பிரவீண்குமார் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: