முக்கிய செய்திகள்

தீவிரவாதத்தை ஒடுக்க சிறப்பு சட்டம் கொண்டுவரப்படும் கேரள மக்களுக்கு பா.ஜ. உறுதி

புதன்கிழமை, 6 ஏப்ரல் 2011      இந்தியா
RAJIV PRATAP

 

திருவனந்புரம்,ஏப்.- 6 - தீவிரவாதத்தையும் இதர கிரிமினல் குற்றங்களையும் தடுத்து நிறுத்த சிறப்பு சட்டம் கொண்டு வந்து செயல்படுத்தப்படும் என்று கேரள மாநிலத்தில் பா.ஜ. சார்பாக வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கேரள மாநில சட்டசபை தேர்தலையொட்டி பாரதிய ஜனதா சார்பாக நேற்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அறிக்கையை கட்சியின் மத்திய பிரிவு செய்தி தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி வெளியிட்டு கூறியதாவது:-

தீவிரவாதத்தையும் இதர கிரிமினல் குற்றங்கள் நடப்பதையும் தடுத்து நிறுத்த சிறப்பு சட்டம் கொண்டுவரப்படும். குஜராத் மாநிலத்தில் முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசானது நாட்டிற்கே ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அங்கு தொழில் பெருகி வருகிறது. அதேமாதிரி கேரள மாநிலத்திலும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும். முன்னேறிய வகுப்பை சேர்ந்த ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செய்யப்படும். மலைசாதியினருக்கு நில ஒதுக்கீடு செய்ய தனியாக ஒரு மசோதா கொண்டுவரப்படும். கேரளாவில் இதர மாநிலத்தவர்களின் நலனுக்கு தனி அமைப்பு ஏற்படுத்தப்படும். உலகப்புகழ் வாய்ந்த சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ரயில்பாதை போடப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: