முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன்டென்னிஸ் போட்டி ஷரபோவா 4 -வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 2 செப்டம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

நியூயார்க், செப். - 2 - அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி யில் மகளிர் ஒற்றையர் பிரிவின் 3 -வது சுற்றில் ரஷ்ய வீராங்கனையான மரியா ஷரபோவா வெற்றி பெற்று 4 -வது சுற் றுக்கு தகுதி பெற்றார்.  ஆடவருக்கான 2-வது சுற்றில் முன்ன ணி வீரர்களான ஜோகோவிஸ் ஆன்டி முர்ரே, டேவிட் பெர்ரர் , மற்றும் டெல் பெட்ரோ ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.  இந்த வருடத்தின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓப ன் டென்னிஸ் முக்கிய நகரமான நியூயார்க்கில் கடந்த ஒரு வார காலமாக வெகு விமர்சையாக நடந்து வருகிறது.  கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்க னைகள் களத்தில் குதித்து உள்ளனர். இந்தப் போட்டி தற்போது காலிறுதியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.  இந்தப் போட்டியில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்க னைகள் தரமான ஆட்டத்தை வெளிப்ப டுத்தி வருகின்றனர். அவர்களது ஆட்ட த் திறன் கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.  மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் 3-வ து சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதி ல் ரஷ்ய நட்சத்திர வீராங்கனையான மரியா ஷரபோவாவும் அமெரிக்க வீராங்கனையும் மோதினர்.  இந்த ஆட்டத்தில் உலகின் 3 -ம் நிலை வீராங்கனையான ஷரபோவா 6 -1, 6 -1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் அமெரிக்க வீராங்கனை மலோரிவை வெ ன்று 4 -வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 

உலகின் முதல் நிலை வீராங்கனையா  ன விக்டோரியா அசரென்கா சீன வீரா ங்கனையுடன் மற்றொரு 3-வது சுற்றில் மோதினார். இதில் அசரென்கா 6 -0, 6 -1 என்ற செட் கணக்கில் ஜிங்கை வென்றார். 

ரஷ்யாவின் மற்றொரு முன்னணி வீரா ங்கனையான பெட்ரோவா 3 -வது சுற் றில் செக்.குடியரசு வீராங்கனை லுசியு டன் மோதினார். இதில் ரஷ்ய வீராங்க னை 6 -4, 7 -5 என்ற கணக்கில் வென்றார். 

நடப்பு சாம்பியனும்,உலகின் 7 -ம் நிலை வீராங்கனையுமான ஆஸ்திரேலி யாவைச் சேர்ந்த சமந்தா ஸ்டோசர் 7 -6(7), 6 -2 என்ற செட் கணக்கில் அமெரிக் க வீராங்கனை லெப்சென்கோவை தோற்கடித்தார். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் 2- வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சா ம்பியனும், 2 -ம் நிலை வீரருமான நோவக் ஜோகோவிக்கும், பிரேசில் வீரரும் மோதினர். 

இதில் செர்பிய வீரரான ஜோகோவிக் அபாரமாக ஆடி, 6 -2, 6 -1,6 -2 என்ற செட் கணக்கில் ஷில்வாவை தோற்கடித் து 3 -வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 

மற்ற ஆட்டங்களில் அமெரிக்க வீரர் ஆன்டி ரோடிக், ஸ்பெயின் வீரர் டேவி ட் பெர்ரர், அர்ஜென்டினா வீரர் டெல்பெட்ரோ, செர்பிய வீரர் டிப்சரோவிக், அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் ஆகி யோர் வெற்றி பெற்று 3 -வது சுற்றுக்கு முன்னேறினர். 

----------------------------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்