முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து அணியில் மீண்டும் இடம்பிடிக்க பீட்டர்சன் முயற்சி

ஞாயிற்றுக்கிழமை, 2 செப்டம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

லண்டன், செப். - 3 - இங்கிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகத்துடன் பேச்சு நடத்தி மீண்டும் அணியில் இடம் பிடிக்க முயற்சித்து வருகிறார் முன்னணி பேட்ஸ்மேன் கெவின்பீட்டர்சன். இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ஆன்டிபிளவர், டெஸ்ட் கேப்டனாக இருந்த ஆண்ட்ரூ ஸ்டிராஸ் ஆகியோரை ஏளனம் செய்து தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு பீட்டர்சன் எஸ்.எம்.எஸ். அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து அவர் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இலங்கையில் இந்த மாதம் 18 ம் தேதி தொடங்கவுள்ள 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணியிலும் பீட்டர்சன் இடம் பெறவில்லை. இதனிடையே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆண்ட்ரூ ஸ்டிராஸ் இரு நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இந்நிலையில் அணி நிர்வாகத்துடன் சமரசம் செய்து கொண்டு மீண்டும் அணியில் இணைய பீட்டர்சன் முயற்சி மேற்கொண்டுள்ளார். முன்னதாக எஸ்.எம்.எஸ். விவகாரத்துக்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பீட்டர்சன் மன்னிப்பு கோரியிருந்தார். இதற்கு பதிலளித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பீட்டர்சன் மீண்டும் நம்பிக்கையையும், இரு தரப்பு மரியாதையையும் பெற வேண்டும் என்று மட்டும் கூறியிருந்தது. பீட்டர்சன் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய போதிலும் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago