முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசி.க்கு எதிரான டெஸ்ட்: இந்தியா தொடரை கைப்பற்றியது

செவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

பெங்களூர், செப். 4 - நியூசிலாந்திற்கு எதிராக பெங்களூரில் நடைபெற்ற 2 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி தரப் பில் விராட் கோக்லி, புஜாரா, ரெய் னா, கேப்டன் தோனி, சேவாக் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக, அஸ்வின், கா ம்பீர், சச்சின் ஆகியோர் ஆடினர். 

பெளலிங்கின் போது, அஸ்வின் மற்று ம் ஓஜா இருவரும் அபாரமாக பந்து வீசினர். அவர்களுக்கு ஆதரவாக உமே ஷ் யாதவ் மற்றும் ஜாஹிர்கான் ஆகி யோர் பந்து வீசினர். 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக ளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப் பட்டது. கடந்த வாரம் முடிந்த முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. 

இதன் 2 - வது டெஸ்ட் போட்டி பெங்க ளூரில் உள்ள சின்னசாமி அரங்கத்தில் கடந்த 31-ம் தேதி துவங்கி 3-ம் தேதி முடிந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன் னிங்சில் 365 ரன் எடுத்தது. கேப்டன் டெய்லர் 113 ரன்னும், குப்டில் 53 ரன்னு ம், பிளைன் 33 ரன்னும், வான் விக் 71 ரன்னும், பிரேஸ்வெல் 43 ரன்னும் எடு த்தனர். 

இந்திய அணி சார்பில், ஓஜா 99 ரன் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். தவிர, ஜாஹிர்கான் 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் 1 விக்கெட்டு ம் எடுத்தனர். 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய இந்தி ய அணி 353 ரன் எடுத்தது. கோக்லி 103 ரன்னும், தோனி 62 ரன்னும், ரெய்னா 55 ரன்னும், சேவாக் 43 ரன்னும், அஸ் வின் 32 ரன்னும் எடுத்தனர். நியூசி. தரப் பில், செளதீ 7 விக்கெட்டும், பிரே ஸ்வெல் 2 விக்கெட்டும் எடுத்தனர். 

தொடர்ந்து 2 -வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 248 ரன்னை எடுத்த து.  பிராங்ளின் 41 ரன்னும், பிளைன் மற்றும் வான் விக் தலா 31 ரன்னும், மெக்குல்லம் 23 ரன்னும், கேப்டன் டெய்லர் 35 ரன்னும், பிரேஸ்வெல் மற்றும் படேல் தலா 22 ரன்னும் எடுத்தனர். 

இந்திய அணி சார்பில் முன்னணி சுழற் பந்து வீச்சாளரான அஸ்வின் 69 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். தவிர ஓஜா மற்றும் யாதவ் இருவரும் தலா 2 விக்கெட்டும், கான் 1 விக்கெட்டும் எடுத்தனர். 

இந்திய அணி 2-வது இன்னிங்சில் 261 ரன் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை நியூசி. அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்னை எடுத் தது. 

இதனால் இந்திய அணி இந்த 2- வது டெஸ்டில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2- 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

இந்திய அணி தரப்பில், கோக்லி 51 ரன் னும், தோனி மற்றும் புஜாரா தலா 48 ரன்னும், காம்பீர் 34 ரன்னும், சேவாக் 38 ரன்னும், டெண்டுல்கர் 27 ரன்னும் எடுத்தனர். 

நியூசிலாந்து தரப்பில், முன்னணி வீர ரான ஜீதன் படேல் 68 ரன்னைக் கொடு த்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, செளதீ மற்றும் போல்ட் தலா 1 விக்கெட் எடு த்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்