பெண்ணிடம் சில்மிஷம்: எகிப்து அமைச்சர் கைது

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

லண்டன், செப். 14 - பாரா ஒலிம்பிக் போட்டிகளைக் காண லண்டன் சென்ற எகிப்து விளையாட்டுத் துறை அமைச்சர் இப்ராகிம் அகமது கலீல் இளம்பெண்ணின் மார்பைத் தொட்டதற்காக கைது செய்யப்பட்டார்.

எகிப்து நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் இப்ராகிம் அகமது கலீல்(56) லண்டனில் நடந்த பாராலிம்பிக் போட்டியைக் காண சென்றார். அவர் லண்டனில் உள்ள நட்ச்ததிர ஹோட்டலில் தங்கி இருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பாராலிம்பிக் போட்டி நிறைவு நிகழ்ச்சிக்கு செல்ல ஹோட்டலுக்கு வெளியே வந்த அவர் அங்கு தனது தாய் மற்றும் தம்பியுடன் நின்று கொண்டிருந்த இளம்பெண் அருகே சென்றார். அந்த பெண்ணுக்கு எகிப்து தேசியக் கொடி பேட்ஜை குத்திவிடுவது போன்று அவரது மார்பில் கையை வைத்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் தாய்க்கு முத்தம் கொடுத்தார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கலீலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் 2 நாள் போலீஸ் காவலுக்குப் பிறகு லண்டனில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அங்கு கலீல் கூறுகையில், நான் பேட்ஜை எங்கு குத்த என்று தான் கேட்டேன். நான் என்ன தவறு செய்தேன் என்றே புரியவில்லை. அதற்காக நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என்றார். அவருக்கு நீதிபதி ரூ. 14,293 அபராதம் விதித்தார். நீதிபதி அபராதம் வித்தவுடன் மூன்று குழந்தைகளின் தந்தையான கலீல் நீதிமன்றத்திலேயே கண்கலங்கி அழுது விட்டாராம். பாராலிம்பிக் போட்டிகளில் எகிப்து தடகள வீரர்கள் 15 பதக்கங்கள் வாங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: