போராட்டம் தொடர்வதால் அமெரிக்க தூதரகத்துக்கு விடுமுறை

செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.18 - இஸ்லாமியர்களின் தொடர் பேராட்டம் காரணமாக சென்னையில உள்ள அமெரிக்க துணை தூதரகத்துக்கு 3 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் விசா கேட்டு விண்ணப்பிக்க வந்த மக்கள் பாதிக்கப்பட்டனர்.

முஸ்லிம் சமுதாயத்தை புண்படுத்தும் வகையில் , நபிகள் நாயகத்தை சிறுமைப்படுத்தும் திரைப்படத்திற்கு கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் வெளியிட அனுமதி வழங்கியுள்ள அமெரிக்க அரசின் நடவடிக்கையை கண்டித்து உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் அமெரிக்க தூதரகம் உள்ள நாடுகளில் முஸ்லிம்கள் முற்றுகை போராட்டம் நடத்தி எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட்டு பேராட்டம் நடத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க துணை தூதரகத்தை வன்முறையாளர்கள் அடித்து நொறுக்கினர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க துணை தூதரகம் முன்பு பலத்த பாதுகாப்பு பேடப்பட்டுள்ளது. இதனிடையே, முஸ்லிம் அமைப்புகள் தினந்தோறும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றன. இந்த நிலையில் நேற்றும் தூதரகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. முஸ்லிம் அமைப்புகளின் போராட்டத்தால் துணை தூதரகம் முதல் ஆயிரம் விளக்கு மசூதி வரை சுமார் 1000 பேலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து துணை தூதரகத்திற்கு நேற்று முதல் 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தூதரகத்துக்கு இன்றும், நாளையும் 2 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், விசா கேட்டு விண்ணப்பிக்க வந்தவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். தூதரகம் எந்த தேதியில் திறக்கப்படும் என்ற விவரம் இணைய தளத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: