முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் வன்முறை: பலி எண்ணிக்கை உயர்வு

திங்கட்கிழமை, 24 செப்டம்பர் 2012      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், செப். - 24 - பாகிஸ்தானில் சர்ச்சைக்குரிய ஆங்கில திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. முஸ்லீம்களுக்கு எதிரான ஆங்கில திரைப்படத்தை கண்டித்து பாகிஸ்தானில் உள்ள பல நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது வன்முறை வெடித்தது. கராச்சியில் நடந்த கலவரங்களில் 2 போலீசார் உட்பட 17 பேர் இறந்தனர். பெஷாவரில் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் வன்முறைக்கு பலியானோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் நடந்த கலவரங்களில் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்ட கும்பல்கள் கடைகளை சூறையாடுவதும், பொதுச் சொத்துக்களை கொளுத்துவதையும் தொலைக்காட்சி சேனல்கள் தொடர்ந்து ஒளிபரப்பின. கராச்சியில் மட்டும் 5 திரையரங்குகளை வன்முறை கும்பல் சூறையாடியது. இதே போல பெஷாவரில் 3 திரையரங்குகள் சூறையாடப்பட்டன. ஏராளமான வங்கிகள், கடைகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் பொருளும், பணமும் கொள்ளையடிக்கப்பட்டன. முன்னதாக நாடு முழுவதும் பதட்டத்தை தணிப்பதற்காக பாகிஸ்தான் அரசு விடுமுறை அளித்தது. இதன் மூலம் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என்று அது கருதியது. ஆனால் அதற்கு மாறாக வன்முறை கும்பல்கள் தைரியமடைந்து பெருந்தாக்குதல்களில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago