முக்கிய செய்திகள்

லோக்பால் மசோதா ஜூனில் தயாராகும் - மொய்லி

செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011      ஊழல்
Moili

 

மைசூர்,ஏப்.12 - ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று சமூக சேவகர் அன்னாஹசாரே டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். இதையடுத்து இந்த மசோதாவை விரைவில் கொண்டு வர மத்திய அரசு சம்மதித்து 10 பேர் கொண்ட குழுவையும் அமைத்துள்ளது. இந்த குழுவின் அமைப்பாளரும், மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி நிருபர்களிடம் கூறுகையில், 

இந்த மசோதாவை உருவாக்க ஜூன் மாதம் 10 ம் தேதி வரை கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடக்கும் போது இந்த மசோதா தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: