முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நித்தியானந்தா நீக்கப்பட்ட பிறகுதான் விடுதலை: ஆதீனம்

சனிக்கிழமை, 20 அக்டோபர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,அக்.21 - இளைய ஆதீனமாக நியமக்கப்பட்ட நித்தியானந்தா நீக்கப்ப்பட்ட பிறகுதான் நான் மனக்கஷ்டத்தில் இருந்து விடுதலை பெற்றிருக்கிறேன் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தெரிவித்தார்.  தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நித்தியானந்தா நீக்கம் தொடர்பான மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, பழமைவாய்ந்த மதுரை ஆதீனத்தில் ஆன்மீக நெறிகளை காக்கவும், சொத்துக்களை பாதுகாக்கவும் ஒரு வல்லவரை இளையபட்டதிற்கு நியமிக்க வேண்டும் என்று முடிவு செய்து நித்தியானந்தாவை நியமித்தோம். தற்போது அவரை இந்த பதவியில் இருந்து நீக்கி இருக்கிறேன். சைவ மெய்யன்பர்களையும் வேண்டுகோளை ஏற்றும் தமிழக அரசு மற்றும் நீதிமன்றத்தின் விருப்பத்திற்கு இணங்க அவரை பதவியில் இருந்து இறக்கி உள்ளோம். இது இறைவனின் செயல்தான்.

   இளைய பட்டத்தில் இருந்து நித்தியானந்தாவை நீக்கியது தொடர்பாக அவரிடம் நேரிடையாக தெரிவிக்க முடியவில்லை. நித்தியானந்தாவின் சீடர்களும் மடத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டு விட்டனர். நித்தியானந்தா மற்றும் அவரது சீடர்களும் எனக்கு எந்த ஆபத்தும் வராது என்று கருதுகிறேன். அவர் தானாகவே விலகுவார் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அவர் அந்த முடிவை எடுக்கவில்லை. நித்தியாந்தாவின் நீக்கம் இறைவனின் சித்தப்படி நடந்துள்ளது. நித்தியானந்தா நீக்க்பட்டதால் கடந்த சில மாதங்களாக நான் பட்ட மனக்கஷ்டத்தில் இருந்து விடுதலை பெற்றுள்ளேன். இப்போது சுதந்திரமாக இருக்கிறேன். மதுரை ஆதீனத்தின் கதவுகள் எப்போதும் போல திறந்து இருக்கும். வழக்கம் போல் அனைத்து பூஜைகளும் நடைபெறும். எந்த நேரமுகம் பக்தர்கள் வழிபாடு செய்யலாம். நேரம் வரும் போது முதலமைச்சரை சந்திப்பேன். இவ்வாறு கூறினார்.நேற்று காலை ஆதீன மடத்தில் அருணகிரி வழக்கம் போல்  பூஜை நடத்தினார். அதில் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்