முக்கிய செய்திகள்

மதுகோடாவின் ரூ.130 கோடி சொத்து விரைவில் பறிமுதல்

புதன்கிழமை, 13 ஏப்ரல் 2011      ஊழல்
Madhu-Koda

புதுடெல்லி,ஏப்.13 - ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடா முறைகேடாக சேர்த்து வைத்திருக்கும் ரூ. 130 கோடி சொத்து மதிப்பை பறிமுதல் செய்ய மத்திய சட்ட அமுலாக்க பிரிவு அனுமதியை பெற்றுள்ளது. ஜார்க்கண்ட் மாநில முதல்வராக மதுகோடா இருந்தார். இவர் பதவியில் இருந்தபோது அவரும் அவரது உதவியாளர்கள் மற்றும் உறவினர்கள் முறைகேடான முறையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவித்துள்ளனர். இதனையொட்டி இவர் மீதும் அவரது உதவியாளர்கள் மற்றும் உறவினர்கள் மீதும் சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதுகோடா மற்றும் அவரது உதவியாளர்களின் சொத்தில் ரூபாய் 130 கோடி சொத்தை பறிமுதல் செய்ய பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட ஆணையத்தின் அனுமதியை மத்திய சட்ட அமுலாக்க பிரிவு அனுமதியை பெற்றுள்ளது. இந்த மாதிரி சட்ட அமுலாக்க பிரிவு அனுமதி பெற்றிருப்பது முதல் தடவையாகும். மதுகோடாவும் அவரது உதவியாளர்களும் ரூ. 200 கோடிக்கும் மேல் முறைகேடாகவும் மோசடி செய்தும் சொத்து குவித்துள்ளனர். இந்த ரூ.130 கோடி போக மீதமுள்ள சொத்தையும் பறிமுதல் செய்ய சட்ட அமுலாக்க பிரிவு அனுமதியை பெறலாம் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: