இலங்கை 14 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது

செவ்வாய்க்கிழமை, 6 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

பல்லேகல்லே, நவ. - 6 - நியூசிலாந்து அணிக்கு எதிராக பல்லே கல்லே நகரில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 14 ரன் வித்தியாசத்தில் (டக்வொர்த் லீவிஸ் முறைப்படி) வெற்றி பெ ற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி தரப்பில், கேப்டன் ஜெயவர்த்தனே மற் றும் தில்ஷான் இருவரும் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். அவர்களுக்கு பக்கபலமாக சங்கக்கரா ஆடினார். முன்னதாக பெளலிங்கின் போது, இல ங்கை பெளலர்கள் சிறப்பாக பந்து வீசி நியூசி.யின் ரன் குவிப்பை கட்டுப்படுத் தினர். மலிங்கா நன்றாக பந்து வீசி 2 விக்கெட் எடுத்தார். தவிர, குலசேகரா, மேத்யூஸ், பெரீரா, மற்றும் ஹெராத் ஆகியோர் அவர்களுக்கு ஆதரவாக பந் து வீசினர். இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிக ளுக்கு இடையேயான 2 -வது ஒரு நாள் போட்டி பல்லேகல்லே சர்வதேச கிரிக் கெட் அரங்கத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. முன்னதாக இதில் டாசில் வெற்றி பெ ற்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி இறுதியி ல், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவவில் 6 விக் கெட் இழப்பிற்கு 250 ரன்னை எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில், கேப்டன் டெய்லர் அதிகபட்சமாக 62 பந்தில் 72 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரி அடக் கம். தவிர, கீப்பர் வாட்லிங் 86 பந்தில் 55 ரன்னையும், நிக்கோல் 74 பந்தில் 46 ரன்னையும், பிராங்ளின் 40 பந்தில் 35 ரன்னையும், எல். மெக்குல்லம் 16 ரன் னையும், எடுத்தனர். இலங்கை அணி சார்பில் முன்னணி வே கப் பந்து வீச்சாளரான மலிங்கா 39 ரன் னைக் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டைச் சாய்த்தார். தவிர, குலசேகரா, பெரீரா மேத்யூஸ் மற்றும் ஹெராத் ஆகி யோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். பின்பு மழை பெய்ததால் இலங்கை அணி 22.5 ஓவரில் 105 ரன்னை எடுத்தா ல் வெற்றி பெறலாம் என்ற இலக்கு நிர் ணயிக்கப்பட்டது. அடுத்து களம் இறங் கிய இலங்கை அணி 22.5 ஓவரில் 3 விக் கெட் இழப்பிற்கு 118 ரன்னை எடுத்தது.
இதனால் இலங்கை அணி இந்த 2-வது போட்டியில் 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இலங்கை அணி தரப்பில் கேப்டன் ஜெ யவர்த்தனே அதிகபட்சமாக, 49 பந்தில் 43 ரன் எடுத்தார். இதில் 5 பவுண்டரி அடக்கம். தவிர, தில்ஷான் 51 பந்தில் 37 ரன் எடுத்தார். இதில் 5 பவுண்டரி அடக் கம். தவிர, சங்கக்கரா 11 ரன்னையும், மேத்யூஸ் 7 ரன்னையும் எடுத்தனர்.
நியூசிலாந்து அணி சார்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான மில்ஸ் 33 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத் தார். தவிர, போல்ட் மற்றும் எல். மெ க்குல்லம் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக மலிங்கா தேர்வு செய்யப் பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: