மியான்மரில் ஒபாமா பேச்சு: தூக்கம் போட்ட ஹிலாரி

சனிக்கிழமை, 24 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

லண்டன், நவ. 24 - அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மியான்மரில் முக்கியத்துவம் வாய்ந்த உரை நிகழ்த்தியபோது அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் தூங்கி விட்டது தெரிய வந்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமா மியான்மரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் மூலம் மியான்மருக்கு சென்ற முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மியான்மரில் உள்ள யங்கூன் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒபாமா கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த நிகழ்ச்சியில் 1,500 பேர் கலந்து கொண்டனர்.

ஒபாமா நெடுநேரம் உரையாற்றியபோது மியான்மர் எதிர்கட்சித் தலைவர் ஆங் சான் சூகிக்கு அருகில் அமர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் தூங்கிவிட்டார். ஹில்லாரி குட்டித் தூக்கம் போட்டது அங்கிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது. விமானத்தில் பயணம் செய்த களைப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்க வரலாற்றிலேயே அதிகம் பயணம் செய்த வெளியுறவுத் துறை அமைச்சர்களில் ஹில்லாரியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: