எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை நவ.30 - தமிழகத்தில் 2013 ஜூன் முதல் தேவையை விட கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்பதால், அம்மாதம் முதல் மின்வெட்டே இருக்காது என்று மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருந்து வரும் பல மணி நேர மின்வெட்டு வரும் டிசம்பர் மாதம் முதல் படிப்படியாகக் குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பு சார்பில் நிலைத்த நீடித்த எரிசக்தி மேலாண்மையின் புதிய யுகம் என்ற தலைப்பில் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் மின் தேவைக்கும், உற்பத்திக்கும் இடையேயான இடைவெளி 4000 மெகாவாட் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதற்கு மத்திய மின் தொகுப்பிலிருந்து, தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய
பங்கு குறைக்கப்பட்டிருக்கிறதே முக்கிய காரணம். இதை ஈடுகட்ட மத்திய அரசு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழகம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் வட மாநில மின் வழித்துடத்துடன் தென் மாநிலங்கள் முழுமையாக இணைக்கப்படாததால் தேவைக்கு அதிகமாக
மின்சாரம் உற்பத்தி செய்யும் மாநிலங்களிலிருந்து,தமிழகம் கொள்முதல் செய்ய முடியாத நிலைமையும் உள்ளது.
இப்போது வட மாநிலங்களிலிருந்து ஒரு வழித்தடம் மட்டுமே தென் மாநிலங்களை இணைக்கிறது.இந்த ஒரு பாதை வழியாக தமிழகம், கர்நாடகம், ஆந்கிரம், கேரளம் ஆகிய 4 மாநிலங்களும் மின்சாரத்தை கொண்டு வருகின்றன. தொடர் கோரிக்கைகளின் அடிப்படையில் ஒரே புதிய வழித்தடத்தை அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி அளித்து திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த பணி 2014 மார்ச் மாதத்தில்தான் முடிக்கப்படும் என்று தெரிகிறது. அதுவரை நிலைமையை சமாளிப்பதற்காக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய திட்டங்களை, விரைவுபடுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
மேட்டூர், வல்லூர், வடசென்னை, அனல் மின் நிலைய திட்டங்களிலிருந்து வரும் ஜூன் மாதம் முதல் 1880 மெகாவாட் அளவுமின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. தனியார் உற்பத்தியாளர்களும் 2013 ஜூன் மாதத்துக்குள், உற்பத்தியை தொடங்க உள்ளனர். கூடங்குளம் அணு மின் நிலைய முதல் திட்டத்திலிருந்து, முழுமையான அளவில் 1000 மெகாவாட் கிடைக்குமானால், இப்போதுள்ள 4000 மெகாவாட் மின்பற்றாக்குறை ஜூன் மாதம் முதல் சீராவதோடு கூடுதலாக 500 மெகாவாட் மின்சாரம் கையிருப்பு இருக்கும் என்றார் நத்தம் விசுவநாதன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய


