சர்க்கஸ் கம்பெனிகளில் குழந்தைகளை பணியில் அமர்த்தக்கூடாது சுப்ரீம் கோர்ட்டு தடை

திங்கட்கிழமை, 18 ஏப்ரல் 2011      இந்தியா
Supreme-Court-of-India

புதுடெல்லி, ஏப்.- 19 - சர்க்கஸ் கம்பெனிகளில் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. ஏற்கனவே பணியாற்றும் குழந்தைகளை மீட்கும் வகையில் சர்க்கஸ் கண்காட்சிகளில் அதிரடி ரெய்டு நடத்தி அக்குழந்தைகளை மீட்குமாறும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவ்வாறு மீட்கப்படும் குழந்தைகளுக்கான மறுவாழ்வு திட்டம் ஒன்றை வகுக்குமாறும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, ஏ.கே.பட்நாயக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நேற்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. சர்க்கஸ் கம்பெனிகளில் மைனர் குழந்தைகளை வேலை வாய்ப்பில் ஈடுபடுத்தக்கூடாது என்று உத்தரவிட்டு அக்கம்பெனிகளுக்கு உரிய நோட்டீஸ்களை இரண்டு மாதங்களுக்குள்  அனுப்புமாறும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக தன்னார்வ அமைப்பு ஒன்று தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் இவ்வாறு தீர்ப்பளித்தனர். இனியும் சர்க்கஸ் கண்காட்சிகளில் குழந்தைகள் பணியில் அமர்த்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட சர்க்கஸ் கம்பெனியின் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சர்க்கஸ் கம்பெனிகளில் பணியாற்றும் ஏராளமான குழந்தைகள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு கல்வி என்ற அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது. எனவே இதுபோன்ற கொடுமைகளை தடுக்க வேண்டும் என்று கோரி தன்னார்வ அமைப்பு தொடுத்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மேற்கண்டவாறு தீர்ப்பளித்தனர்.
சர்க்கஸ் மட்டுமின்றி எந்தவொரு ஆலையிலுமே குழந்தைகளை பணியில் ஈடுபடுத்துவது சட்டப்படி கிரிமினல் குற்றமாகும்

இதை ஷேர் செய்திடுங்கள்: