ஊழலை ஒழிக்க பாடுபடுகிறேன் ராகுல் காந்தி சொல்கிறார்

திங்கட்கிழமை, 18 ஏப்ரல் 2011      இந்தியா
rahul-gandhi

கொச்சி,ஏப்.- 19 - அரசு நிர்வாகத்தை முழுவதும் கெடுத்து வரும் ஊழலை ஒழிக்கவே உழைத்து வருகிறேன் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி  கூறியுள்ளார்.  ாட்டில் ஊழல் மலிந்துள்ள நிலையில் ராகுல் காந்தி அது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமால் மெளனம் சாதித்து வருகிறார் என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர் கிருஷ்ணய்யர் குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு பதிலளித்து ராகுல் காந்தி பேசியதாவது:-
அரசின் பல்வேறு நிலைகளில் ஊழல் மலிந்து விட்டது என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதனை ஒழிக்கவே நான் உழைத்து வருகிறேன். இதனை எவ்வாறு ஒழிப்பது என்று நான் சிந்தித்து பணியாற்றி வருகிறேன். என்னை நாட்டின் கதாநாயகனாக முன்னிருத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் அதை ஒரு போதும் ஏற்றுக்கொண்டதில்லை. என்று ராகுல் காந்தி பேசினார். முன்னதாக ஊழலை எதிர்த்து லோக்பால் மசோதாவை வலியுறுத்தி அன்னாஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வீ.ஆர்.கிருஷ்ணய்யர் ராகுல் காந்திக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் நேருபோன்றவர்கள் கனவு கண்ட இந்தியாதான் நமக்கு வேண்டும். மத்திய அரசு ஊழலுக்கு துணை போகிறது. பிரதமர் செயலற்ற நிலையில் இருக்கிறார். அவரை இயக்கும் வலிமை படைத்த நீங்கள் ஊழலைக் கண்டு கொள்வதில்லை. நாட்டின் கதாநாயகனாக முன்னிருத்தப்படும் நீங்கள் எதையும் கண்டு கொள்வதில்லை. ஊழல் ஒழித்தால் தான் நீங்கள் உண்மையான கதாநாயகனாக கருதப்படுவீர்கள் என்று எழுதி இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: