முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெய்ப்பூரில் 20-ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 15 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஜன. 16 - வரும் 20 ம் தேதி ராஜஸ்தானில் நடக்கும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை தமிழக காங்கிரசார் புறக்கணிக்கப் போவதாக கூறப்படுகின்றது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் வரும் 20 ம் தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள இந்திய அளவில் உள்ள பி.சி.சி. உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 104 உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம். கூட்டத்திற்கு வரும் உறுப்பினர்களிடம் ரூ. 800 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறதாம்.

இந்த நிலையில் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள பலருக்கு விருப்பமில்லையாம். தற்போது வட மாநிலங்களில் கடுங்குளிர் நிலவி வருகின்றது. ராஜஸ்தானிலும் தாங்க முடியாத குளிராக உள்ளதாம். மேலும் கூட்டத்தில் பேசும் பலரும் இந்தியில் பேசுவார்கள் என்பதால் அது பலருக்கும் புரியாத பாஷையாக உள்ளதாம். இது போன்ற சிக்கலான நேரத்தில் அங்கு சென்று என்ன செய்யப் போகின்றோம் என பலர் இந்த கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. குளிர் மற்றும் மொழி பிரச்சனையால் தமிழக காங்கிரசார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago