முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெரினா பட ​செலவை தாக்கல் செய்ய இயக்குனருக்கு உத்தரவு

சனிக்கிழமை, 19 ஜனவரி 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜன. 20 -​மெரினா பட வரவு​செலவை தாக்கல் செய்ய வேண்டும் என்று  இயக்குனர் பாண்டிராஜுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வளசரவாக்கத்தைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் பாலமுருகன் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் இயக்குனர் பாண்டிராஜுக்கு எதிராக ஏற்கனவே வழக்கு தொடர்ந்து இருந்தார். ரூ. 50 லட்சம் செலவிட்டு மெரினா படத்தை தயாரித்ததாகவும் படத்தின் தயாரிப்பாளர் என்று தன்னை பாண்டிராஜ் அறிவிக்கவில்லை என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

தயாரிப்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்றும் கோரி இருந்தார். பின்னர் இந்த வழக்கில் சமரசமாக போய் விடுவதாக கோர்ட்டில் இருவரும் உத்தரவாதம் அளித்தனர். ஆனால் உத்தரவாதத்தை பாண்டிராஜ் மீறி விட்டார் என்று பாலமுருகன் மீண்டும் சென்னை 7​வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

மெரினா பட வரவு​செலவு கணக்குகளை ஆய்வு செய்ய அட்வகேட் கமிஷனை கோர்ட்டு நியமித்தது. ஆனால் கோர்ட்டில் உறுதி அளித்தபடி அசல் கணக்கு விவரங்களை கமிஷனில் பாண்டிராஜ் தாக்கல் செய்யவில்லை என்றும் எனவே கோர்ட்டு அவமதிப்பில் அவரை தண்டிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

வழக்கு விசாரணையின் போது இரண்டு முறை பாண்டிராஜ் கோர்ட்டில் ஆஜராகவில்லை.  இந்த வழக்கு nullநீதிபதி பல்சீஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வருகிற 30-​ந் தேதிக்குள் மெரினா பட வரவு​செலவு கணக்கின் அசல் ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தர விட்டார். அவமதிப்பு வழக்கில் 30​ந்தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony