முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் - ஜெயலலிதா இரங்கல்

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, பிப்.21- பிரபல தமிழ் திரைப்பட பின்னணி பாடகரும், நடிகருமான மலேசியா வாசுதேவன் மறைவிற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

பிரபல திரைப்பட பின்னணி பாடகரும், நடிகருமான மலேசியா வாசுதேவன் உடல் நலக் குறைவால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (நேற்று) இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். 

தமிழ் திரைப்படங்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய மலேசியா வாசுதேவன், தனது இனிய குரலாலும், திறமையான நடிப்பாலும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். அவருடைய இழப்பு தமிழ் திரைப்பட துறைக்கு மிகப் பெரிய பேரிழப்பு ஆகும். 

மலேசியா வாசுதேவனை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago