டாக்டர்கள் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும்: கலாம்

செவ்வாய்க்கிழமை, 5 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

ஹைதராபாத், பிப்.6:- டாக்டர்களிடம் அன்பு, கருணை, பொறுமை, உயர்ந்த நெறிமுறை, ஒரு முகத்தன்மை போன்ற சிறந்த பண்புகள் இருக்க வேண்டும் என்று குடியரசு  முன்னாள் தலைவர் அப்துல்கலாம் அறிவுறுத்தினார். ஹைதராபாதில் உள்ள கேர் மருத்துவமனை குழுமத்தின் புறநோயாளிகள் சிகிச்சை மைய திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இம்மையத்தை திறந்து வைத்து, கலாம் பேசியதாவது:​-

டாக்டர்களுக்கு கருணையுடன் விசேஷ திறமையை வளர்த்துக்கொள்ளும் மனப்பான்மை இருப்பது அவசியம். போதிய உள்கட்டமைப்பு  மற்றும் மருத்துவ வல்லுநர்கள் இல்லாததால் நாடு முழுவதும் 23 ஆயிரம்  ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயலற்றுக்கிடக்கின்றன. இந்த மருத்துவமனையானது(கேர்  குழுமம்) அருகிலுள்ள 20 ஆரம்ப சுகாதார நிலையங்களையாவது நல்ல முறையில் செயல்பட வைக்க  முயற்சிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.  கேர் மருத்துவமனை குழுமம்  ஐந்து மாநிலங்களில் 12 பல் நோக்கு மருத்துவமனைகளை நடத்தி வருகிறது. 13 புறநோயாளிகள் சிகிச்சை மையங்களை திறந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: