ஈரோட்டில் தே.மு.தி.க எம்.எல்.ஏ வீடு முற்றுகை

ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

ஈரோடு,பிப். 10-  ஈரோட்டில்  தே.மு.தி.க  எம்.எல்.ஏ வீட்டை பொதுமக்கள்நேற்று முற்றுகையிட்டனர். இது பற்றிய விபரம் வருமாறு : ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ வி.சி சந்திரகுமார்  இவர் தே.மு.தி.க  கட்சியை சேர்ந்தவர் . இவர் தொகுதிக்குள் வந்து பொதுமக்கள் குறைகளை தீர்க்கவில்லை என கூறி நேற்று ஈரோடு கிராமடை பகுதியில் உள்ள அவரது வீட்டு  கருங்கல் பாளையம் 58 வதுவார்டு பகுதியை சேர்ந்த சுமார் 100 பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்கள்  போராட்டத்தில் கலந்து கொண்ட அவர்கள் கூறும் போது சந்திர குமார் எம்.எம்.ஏ. ஓட்டு கேட்டுமட்டும் வந்தார் பின் தொகுதி பக்கம்  அவர் வருவதில்லை.  எங்கள் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் வருகின்றது. சாலை வசதிகள் மிகவும் மோசமாக உள்ளது,கழிவு நீர் அப்புறப்படுத்தப்படுவதில்லை, மேலும் ரேசன் கடைகளில் மண்ணெண்னை,அரிசி உள்பட எந்த பொருட்களும்   சரியாக வழங்கப்படுவதில்லை. 5 நாட்கள் மற்றும் 10 நாட்களுக்கு ஒரு முறைதான் பொருட்டகள் வழங்கப்படுகின்றது.இதுபோல எங்கள் பகுதியில் பல குறைகள் உள்ளது இவற்றை  எம்.எல்.ஏவை சந்தித்து கூறலாம்  என பல முறை நாங்கள் முயற்சி செய்து அவரை பார்க்க முடிவதில்லை.  அவரது அலுவலகத்தில் சந்திக்கலாம் என அலுவலகத்திற்கு வந்தால் அலுவலகம் எப்போதும் பூட்டிக்கிடக்கின்றது. மேலும் முதியோர் உதவித்தொகை உள்பட  அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெற எங்களுக்கு எம்.எல்.ஏ உதவுவதில்லை .கடந்த தேர்தல் போது  அதைசெய்வேன், இதை செய்வேன் வாக்குறுதிகளை அள்ளிவிசிய சந்திர குமார் வெற்றிபெற்ற பிறகு எங்களை எட்டிக்கூட பார்க்கவில்லை.வாக்குறிதிகளை நிறைவேற்றவும் இல்லை . இவரது செயலை கண்டித்துதான்  இன்று அவர் வீட்டை முற்றுகையிட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ வீட்டை பொதும க்கள் முற்றுகையிட்ட செயல் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: