முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டேவிட் மற்றும் கடல் திரைப்படத்தை தடைசெய்யக்கோரி புகார்

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, பிப்.14 - சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட டேவிட் மற்றும் கடல் படத்தை தடை செய்யக்கோரி மூன்று கிறிஸ்துவ அமைப்புகள் புகார் போலீஸ் கமிஷ்னரிடம்  மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:-

டேவிட் மற்றும் கடல் ஆகிய சினிமா படங்களில் கிறிஸ்தவ மதத்தை இழிவுப்படுத்தி எடுக்கப்பட்ட காட்சிகள் உள்ளன. அதே சினிமாவில் கிறிஸ்து மதம் குறித்து தவறான வசனங்களையெல்லாம் உட்புகுத்தப்பட்டுள்ளது. அவற்றை நாங்கள் கண்டிக்கிறோம்.

தற்போது திரை அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் டேவிட் திரைப்படத்தில் மதுபானத்தை ஊற்றி அதை மெழுகுவர்த்தி சுடரினால் கொளுத்துவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அதே போல் ஒரு கிறிஸ்தவன் எப்போதுமே குடித்துக் கொண்டிருப்பதை போலவும், கிறிஸ்துமஸ் தாத்தா என்று உலக மக்களால் போற்றி வாஞ்சையோடு போற்றப்படும் சான்டாகுரூஸ் கேரக்டரை அதே டேவிட் படத்தில் புகுத்தி கிறுக்கு சாண்டா என்று பல கட்டங்களில் கிறிஸ்மஸ் தாத்தாவை இழிவுப்படுத்தி வசனம் பேசுகிறார்கள். உலகம் போற்றும் கிறிஸ்தவ மதத்துக்கு எதிராக தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கும் டேவிட் மற்றும் கடல் திரைப்படம் எடுக்க காரணமானவர்கள் மீதும் திரைப்படம் வெளியாக காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி தி.குளோபல் கிறிஸ்டியன் சர்ச் ஆப் இந்தியா ஆகியோர் புகார் தெரிவித்தனர். அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ஐசக் அய்யா தலைமையில் சுமார் 30 -க்கும் மேற்பட்டோர்  கமிஷ்னர் அலுவலகத்திற்கு வந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago