நடிகை சோனாவுக்கு நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, பிப்.14 - நடிகை சோனாவுக்கு  மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளித்து ஐகோர்ட்நீதிபதி உத்தரவிட்டார்.

ஆண்களை பற்றி தவறாக  நடிகை சோனா பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். இது ஆண்களை கேவலப்படுத்துவதுபோல் உள்ளது என்று கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று ஆண்கள் பாதுகாப்பு சங்கம்  எழும்ர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.இந்த வழக்கில் ஆஜராக நடிகை சோனாவுக்கு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், அதற்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் சோனா மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. 

நடிகை குஷ்பு அளித்த பேட்டி தொடர்பாக பல்வேறு இடங்களில் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் அனைத்து கோர்ட்டுகளிலும் அவர் ஆஜராக தேவையில்லை என்று ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி சோனாவுக்கும் கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று சோனா தரப்பில் வக்கீல்  வாதிட்டார். அதை தொடர்ந்து மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜராக சோனாவுக்கு விலக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: