கே.எம்.சி மருத்துவமனையில் ஸ்கேன்கள் மற்றும் புதிய பிரிவுகள்

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.14 - சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.7.04 கோடி செலவில் சி.டி.எஸ். கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன், பச்சிளம் குழந்தைகள் மைய கண்காணிப்பு கேமிரா, மயக்கவியல் தீவிர சிகிச்சை பிரிவு, வலி நிவாரணம் மற்றும் சார்பியல் பிரிவு ஆகிய சிறப்பு பிரிவுகளின் திறப்பு விழா 13.2.13 புதன் கிழமை மாலை 3.30 மணிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.கோகுலஇந்திரா  தலைமையில்  நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.வி.எஸ்.விஜய் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மேயர் சைதை சா.துரைசாமி, நல்வாழ்வுத்துறை ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர்.ஜே.ராதாகிருஷ்ணன் மருத்துவகல்வி இயக்குனர் டாக்டர்.வம்சதாரா, மருத்துவமனை டீன் டாக்டர்.தே.ராமகிருஷ்ணன், பேராசிரியர் டாக்டர் தேவி மீனாள், 8-வது மண்டல குழுத்தலைவர் ஏ.இ.வெங்கடேசன் எம்.சி, சரஸ்வதி ரங்கசாமி, எஸ்.அமீர்பாஷா எம்.சி, பவானிசங்கர், எஸ்.ஆர்.விஜயகுமார், டி.தசரதன், வ.சுகுமார்பாபு எம்.சி, வாசுகி பவானிசங்கர் எம்.சி, ஜீவாதீனன் எம்.சி, பி.செல்வி எம்.சி, மல்லிகா கந்தன்  எம்.சி, கே.குப்பன், என்.கந்தன், கூடல் வே.கோவிந்தன், கோ.தமிழ்செல்வன், இ.நந்தகோபால், ஏ.எஸ்.பச்சையப்பன், பி.பாபு, கே.முருகன் மற்றும் மருத்துவ அலுவலர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: