குரூப்​-1 தேர்வு: 1 லட்சத்து 26 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர்

வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.15 - குரூப்​1 தேர்வில் 25 பணியிடங்களுக்கு 1 லட்சத்து 26 ஆயிரம் பேர்  நாளை தேர்வு எழுத உள்ளனர். தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி. உள்பட 131 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டிருந்தது. இதில் வெற்றி பெற்ற 262 பேரில் ரேங்க் அடிப்படையில் வந்த 131 பேரை .நேற்று  கலந்தாய்வுக்கு அழைத்திருந்தனர்.

ஒவ்வொருவரும் என்னென்ன வேலைகளில் சேர விருப்பமோ அதை தேர்ந்தெடுத்தனர். வருகிற 16-ந்தேதி (நாளை) நடைபெறும் குரூப்​1 தேர்வில் 25 பணியிடங்களுக்கு 1 லட்சத்து 26 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.

சென்னையில் மட்டும் 26 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள் கலெக்டர் அலுவலகம் சென்று முறையிடலாம். அல்லது தேர்வாணைய அலுவலகத்திற்கு இ.மெயில் மூலம் தகவல் தெரிவித்தால் ஹால் டிக்கெட் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வாணைய தலைவர் நட்ராஜ் கூறினார்.

குரூப்​2 மறுதேர்வு முடிவுகள் இன்னும் 5 நாட்களில் வெளியிடப்படும் என்றும், தட்டச்சர் தேர்வில் வென்றவர்கள் பணி நியமன ஆணையை கலெக்டர் அலுவலகத்தில் பெறலாம் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: