முக்கிய செய்திகள்

எழுத்தாளர் அருந்ததிராய் மீதான வழக்கு ஒத்திவைப்பு

Arunthadhi

 

புது டெல்லி,ஏப்.22 - எழுத்தாளர் அருந்ததிராய் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட தேச துரோக வழக்கை பாட்டியாலா நீதிமன்றம் ஜூலை 4 ம் தேதி ஒத்தி வைத்துள்ளது. டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பர் 21 ம் தேதி நடைபெற்ற காஷ்மீர் பிரச்சினை தொடர்பான விவாத மேடையில் பேசிய எழுத்தாளர் அருந்ததிராயட், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி, கவிஞர் வரவா ராவ் உள்ளிட்டோர் நாட்டின் இறையான்மைக்கு எதிராக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

காஷ்மீர் தனி நாடு என்பதாக அவர்கள் பேசிய கருத்துக்கள் ஊடகங்களில் வெளிவந்ததை தொடர்ந்து சுஷில் பண்டிட் என்பவர் டெல்லி போலீசில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து அருந்ததிராய் உள்ளிட்டோருக்கு எதிராக போலீசார் தேச துரோக வழக்கு பதிவு செய்தனர். 

ஆனால் அதன் பின்னர் போலீசார் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதை எதிர்த்து டெல்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் சுஷில் பண்டிட் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது திலக் மார்க் போலீஸ் இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மனுதாரரின் புகாரை பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக விளக்கமளித்தார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி அடுத்த விசாரணையை ஜூலை 4 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: