முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் புகார்: இந்திய பேஷன் டிசைனருக்கு 59 ஆண்டு சிறை

வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

நியூயார்க், பிப். 16 - இந்தியாவைச் சேர்ந்த பிரபல பேஷன் டிசைனர் ஆனந்த் ஜான், பாலியல் குற்றத்திற்காக அமெரிக்காவில், 59 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொண்டுள்ள நிலையில் தன்மீதான ஒரு புகாரை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த ஆனந்த் ஜான், 1999 ம் ஆண்டு அமெரிக்காவில் பிரசித்தி பெற்ற பேஷன் டிசைனராக இருந்தவர். பிரபல நட்சத்திரங்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்தவரான ஆனந்த் ஜான் மீது, 2007 ம் ஆண்டு பாலியல் புகார் சுமத்தப்பட்டது. பேஷன் உலகில் மாடலாக வலம் வருவதற்கு வாய்ப்பு தருவதாக கூறி தங்களை பலவந்தப்படுத்தியதாக ஜான் மீது 7 பெண்கள் புகார் தெரிவித்தனர். இவர்களில் 14 வயது சிறுமியும் ஒருவர். 

இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஜான் மீது 49 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. இந்த குற்றங்களின் பேரில், கலிபோர்னியா சிறையில் 59 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்துவரும் ஜான் மீது, மான்ஹாட்டன் நீதிமன்றத்திலும் விசாரணை நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் நடந்த விசாரணையின்போது தன் மீதான குற்றங்களில் ஒன்றை ஆனந்த் ஜான் ஓப்புக்கொண்டார். 

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக ஆனந்த் ஜான் கலிபோர்னியாவில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், ஒரு குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. ஆனந்த் ஜானுக்கு ஏற்கனவே 59 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ள நிலையில், டெக்சஸ், நியூயார்க்கிலும் அவர் மீதான குற்றங்களின் பேரில் விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago