சச்சினின் சாதனையை முறியடித்த தோனி

செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, பிப். 26 -  சென்னையில் நடைபெற்று வரும் ஆஸ் திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ் டில் 224 ரன் எடுத்ததன் மூலம் டெண்டு ல்கரின் சாதனையை கேப்டன் தோனி முறியடித்து இருக்கிறார். தோனி சென்னை டெஸ்டில் 224 ரன் எடுத்ததன் மூலம் டெஸ்ட்  போட்டியி ல் அதிக ரன் எடுத்த இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்று இருக்கிறார். 

இதற்கு முன்பாக, டெண்டுல்கர் கேப்ட னாக இருந்த  போது, 217 ரன் எடுத்ததே சாதனையாக இருந்து வந்தது. அவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக அகம தாபாத்தில் 1999 - 00 ம் ஆண்டு நடந்த டெஸ்டில் இந்த சாதனையை படைத் தார். 

தோனி 144 -வது ஓவரில் லியான் பந்தி ல் 1 சிக்ஸ் அடித்து 217 ரன்னை எட்டி னார். பின்பு 1 ரன்னை எடுத்து சச்சினி ன் சாதனையை முறியடித்தார். 

இருந்த போதிலும் தோனி இன்னும் 8 ரன் எடுத்து இருந்தால் ஒரு கேப்டனின் அதிகபட்ச தனி நபர் ஸ்கோரை சமன் செய்து இருப்பார். ஆன்டி பிளவர் இந் திய அணிக்கு எதிராக 232 ரன் எடுத்ததே இதுவரை சாதனையாக உள்ளது. 

இந்திய கேப்டன்களின் அதிகபட்ச ரன் கள் : - 

1) மகேந்திர சிங் தோனி - 224 ரன் - ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக - சென் னை. 

2) டெண்டுல்கர் - 217 - நியூசிலாந்து அணிக்கு எதிராக - அகமதாபாத் . 

3) சுனில் கவாஸ்கர் - 205 - மே.இ.தீவுக் கு எதிராக - மும்பை. 

4) எம்.ஏ.கே. பட்டோடி - 203 - இங்கி லாந்திற்கு எதிராக - டெல்லி .

இதை ஷேர் செய்திடுங்கள்: