சர்வதேச செஸ் போட்டி: ஆனந்துக்கு 2 வது இடம்

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2013      விளையாட்டு
Image Unavailable

ஜூரிச், மார்ச். - 4 - ஜூரிச் செஸ் சேலஞ்ச் போட்டியின் கடைசி சுற்றில் ரஷ்யாவின் விளாதிமிர் கிராம்னிக்கை வீழ்த்தி 2 வது இடத்தைப் பிடித்தார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த். அதே நேரத்தில் இத்தாலியின் பேபியானோ, கருணா, இஸ்ரேலின் போரிஸ் கெல்பாண்டை வீழ்த்தி 4 புள்ளிகளுடன் சாம்பியன் ஆனார். ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் 5 சுற்றுகள் முடிவில் கடைசி இடத்தில் இருந்த ஆனந்த் கடைசி சுற்றில் வெற்றி கண்டதன் மூலம் 3 புள்ளிகளுடன் 2 வது இடத்தை பிடித்தார். கடைசி சுற்றில் தோல்வி கண்ட கிராம்னிக் கெல்பான்ட் இருவரும் தலா 2, 5 புள்ளிகளுடன் 3 வது இடத்தைப் பிடித்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: