இஸ்ரேலில் ஒபாமா சுற்றுப் பயணம்: காசாவில் தாக்குதல்

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

டெல் அவிவ், மார்ச். 23 - இஸ்ரேலில் அமெரிக்கா அதிபர் பராக் ஒபாமா சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் அந்நாட்டின் எல்லைகளில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருந்து ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இஸ்ரேல் நாட்டில் 2 வது நாளாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார் இந்நிலையில் தெற்கு இஸ்ரேல் எல்லைப் பகுதியில் தேரோட் நகரத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் காசா பகுதியிலிருந்து நடத்தப்பட்டதாகக் இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. தாக்குதலில் ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளில் ஒன்று எல்லைப் பகுதியில் இருந்த ஒரு வீட்டின் முன்பும் மற்றொன்று திறந்த வெளியிலும் வெடித்திருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஒபாமா பாலஸ்தீனதில் உள்ள ரமல்லா பகுதியில் ஏசு கிறிஸ்து பிறந்த இடத்தை நேரில் சென்று பார்க்க இருக்கும் நிலையில் தாக்குதல் நடந்திருப்பது அப்பகுதியில் பதட்டத்தை உருவாக்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: