கோர்ட்டில் கொலைகாரனை கவ்விப் பிடித்த துப்பறியும் நாய்

புதன்கிழமை, 3 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஏப். 4 - துப்பறியும் நாயின் சாட்சியத்தால் அதாவது அடையாள அணிவகுப்பின் போது ஒருவனையே திரும்பத் திரும்ப கவ்விப் பிடித்ததால் அதே ஆளை கொலை குற்றவாளி என்று ஊர்ஜிதம் செய்து மும்பை ஐகோர்ட் அவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

மும்பை ஐகோர்ட்டில் நீதிபதிகள் பி.டி.கே. டே, வி.கே. தாகில் ரமணி ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் ரமேஷ் ராஜா சவானுக்கு ஆயுள் தண்டனையை ஊர்ஜிதம் செய்தது. கீழ்கோர்ட்டிலும் இவனுக்கு இதே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

நாங்கள் எல்லாம் அதிபுத்திசாலி மிருகங்கள். அவற்றுக்கு இருக்கும் மோப்ப சக்தி அபாரம். அந்த சக்தியை அடிப்படையாக கொண்டு எதையும் நம்பலாம் என்ற விஞ்ஞான முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். கடந்த 2003 ம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ம் தேதி அதிகாலை காட்கோபர் பகுதியில் உள்ள மம்தா கூட்டுறவு விவசாய சங்கத்தில் விஷால் மேத்தா என்பவரின் வீட்டுக்குள் மர்ம ஆசாமிகள் நுழைந்தனர். 

அங்கு தூங்கிக் கொண்டிருந்த விஷாலின் தந்தை நவ்தம், தாய் வின்சாபென், சகோதரர் ஜே ஆகியோரை இரும்புத் தடியால் தாக்கி கொன்று விட்டு தப்பி ஓடினர். வீட்டுக்குள் நுழையும் முன் வாசலில் காவலில் இருந்த வாட்ச்மேனையும் அடித்து கொன்றிருக்கிறார்கள். காம்பவுண்டுக்குள் திபுதிபுவென்று மர்ம ஆசாமிகள் நுழைவதை மேல் வீட்டில் இருந்தவர்கள் பார்த்து கத்தியிருக்கிறார்கள். 

அதற்குள் மர்ம ஆசாமிகள் தப்பி ஓடி விட்டார்கள். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு தரையில் கிடந்த ஒரு ஜோடி செருப்பை கைப்பற்றினார்கள். சந்தேகத்துக்கு இடமான முறையில் இருந்த சிலரை பிடித்தனர். துப்பறியும் நாய் வரவழைக்கப்பட்டது. அடையாள அணிவகுப்பில் 8 பேர் வரிசையாக நிறுத்தப்பட்டனர். 

கல்யா எனப்படும் சவானை பார்த்ததும் துப்பறியும் நாய் விடாமல் குறைத்தது. அடையாள அணிவகுப்பை அடுத்தடுத்து 3 தடவை போலீசார் மூன்று முறை நடத்தினார்கள். ஒவ்வொரு தடவையும் அதே சவானை பார்த்து குலைத்த துப்பறியும் நாய் அவன் கையை கவ்வியது. இதில் இருந்து அவன்தான் குற்றவாளி என்று நிரூபணமானது. 

மேலும் இரும்புக் கடைக்காரர் ஒருவர் அளித்த சாட்சியத்தில் சவான்தான் சம்பவத்தன்று தன் கடையில் இருந்து இரும்புத்தடியை வாங்கிப் போனதாக சாட்சியமும் அளித்திருந்தார். இந்த நிலையில் அவன் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டான். கீழ்க்கோர்ட்டில் விதித்த ஆயுள் தண்டனையையே ஐகோர்ட்டிலும் உறுதி செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: