முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு தொடர்ந்து நீடிக்கக்கூடாது: ராஜ்நாத் சிங்

புதன்கிழமை, 3 ஏப்ரல் 2013      ஊழல்
Image Unavailable

 

மும்பை,ஏப்.4 - ஊழலுக்கு காரணமான மத்திய அரசு தொடர்ந்து நீடிப்பதில் எந்த நியாயமும் இல்லை என்று பாரதிய ஜனதா தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பா.ஜ.க.தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ராஜ்நாத் சிங் முதல் முறையாக மும்பை வந்தார். மும்பையில் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வர சாத்தியம் இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை சீர்குலைக்க எங்களுக்கு விருப்பமும் இல்லை. உண்மையை சொல்லப்போனால் இந்த அரசு விரைவில் வீட்டுக்கு போக வேண்டும். ஆனாலும் இந்த அரசை கவிழ்க்க நாங்கள் எந்த முயற்சியும் எடுக்கமாட்டோம். பொருளாதார துறையில் இந்த அரசு முற்றிலுமாக தோல்வி அடைந்துவிட்டது. எங்கும் பரவியிருக்கும் ஊழலுக்கு இந்த அரசுதான் காரணமாகும். இந்த அரசு தொடர்ந்து நீடிப்பதில் எந்த நியாயமும் இல்லை.  மன்மோகன் சிங் அரசு தவறான பொருளாதார கொள்கைகளை பின்பற்றியதால்தான் நிதிப்பற்றாக்குறை நிலவுகிறது. நரேந்திரமோடிக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. காரணம், அவர், அனுபவம் வாய்ந்த நீண்ட கால முதல்வர். மேலும் ஒரு இடம் காலியாக இருந்தது. அந்த இடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கூறிய அவரிடம் பா.ஜ.க. மத்திய குழுவில் இருந்து யஷ்வந்த் சின்ஹா ஏன் நீக்கப்பட்டார் என்று நிருபர்கள் கேட்டனர். அது உண்மை அல்ல. அவர் பா.ஜ.க.தேசிய செயற்குழுவில் உறுப்பினராக இருக்கிறார் என்று பதில் அளித்தார். ஒளரங்காபாத் உள்ளிட்ட வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களையும் அவர் சுற்றிப்பார்த்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago