புது டெல்லி, ஏப். 10 - நாட்டின் பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே. நாராயணன் 2005 ல் நியமிக்கப்பட்டபோது பிரதமருக்கான நெருக்கமான இடத்தில் கேரள மாபியா உட்கார்ந்திருக்கிறது என்று அமெரிக்க தூதராக இருந்த முல்போடிர்டு கருத்து தெரிவித்த ஆவணத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கிறது.
தீட்சித்தின் மறைவுக்குப் பிறகு எம்.கே. நாராயணன் 2005 ம் ஆண்டில் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அப்போது ஏற்கனவே பிரதமரின் முதன்மை ஆலோசகர் டி.கே.ஏ. நாயர் இருந்தார். அவர் ஒரு கேரளக்காரர். அவரைத் தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த நாராயணனும் மிக முக்கிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். பொதுவாக மத்திய அரசு வட்டாரங்களில் இந்தி மொழி பேசுவோர் ஆதிக்கமே அதிகம். ஆனால் தற்போது மன்மோகன்சிங்குக்கு மிக நெருக்கமான இடத்தில் கேரளத்தைச் சேர்ந்த 2 பேர் செயல்படுவது ஆச்சரியமாக இருக்கிறது. இவர்கள் கேரள மாபியா என்று முல்போர்டிடு அமெரிக்காவுக்கு அனுப்பிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.