முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. உயர் மட்டக்குழு இன்று கூடுகிறது

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011      ஊழல்
Image Unavailable

 

சென்னை, ஏப்.26 - 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் மத்திய புலனாய்வுத்துறையால், நேற்று (ஏப்.25) சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2-வது குற்றப்பத்திரிகையில் கருணாநிதியின் மகள் கனிமொழி, கலைஞர் டி.வி.யின் மற்றொரு பங்குதாரர் சரத்குமார் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

இது தி.மு.க. வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தி.மு.க.வின் உயர் மட்டக்குழு கூட்டம் 27-ந் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவித்துள்ளார். ரூ.214 கோடி கலைஞர் டி.வி. பெற்ற கடனை முறையாக திருப்பி தந்தும், சி.பி.ஐ. விசாரணை நடத்தியது என்றும், இந்நிலையில் கனிமொழி பெயர் சேர்க்கப்பட்டு தேவையில்லாமல் இந்த பிரச்சினையை பெரிசு படுத்தப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டுவருவதாக குற்றம் சாட்டியுள்ள அவர். இது குறித்து ஆலோசிக்க தி.மு.க. உயர் மட்டக் குழு கூட்டம் கூட்டப்படுவதாக கூறியுள்ளார். 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், மத்திய அரசு எந்த விதநடவடிக்கையும் எடுக்கவில்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் தான் சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்துள்ளதாக பதிலடி கொடுத்துள்ளது. கனிமொழி கைதாவதை தடுக்க மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு என்ற ஆயுதத்தை மீண்டும் கையிலெடுத்து மிரட்ட தி.மு.க. தயாராகி வருவதாகவும் அதன் எதிரொலிதான் தி.மு.க. உயர் மட்டக் குழு கூட்டம் என்று அந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க. உயர் மட்டக்குழு கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணியில் நீடிப்பதா? இல்லையா? என்று ஆலோசிக்கவும், இல்லையென்றால் வழக்கம்போல் மிரட்டல் நாடகத்தை துவக்கலாமா? என்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

இந்த கூட்டத்தில் கருணாநிதி தலைமையில் அன்பழகன், மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி, தயாநிதிமாறன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். கனிமொழி மே.6-ந் தேதி கோர்ட்டில் ஆஜராகும் போது எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் கலைஞர் டி.வி. முடக்கத்தை தவிர்க்கவும் ஆலோசிக்க உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!