முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட கொரியாவுக்கு ஜி-8 நாடுகள் கடும் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

 

லண்டன், ஏப். 13 - கொரிய தீபகற்பத்தில் வட கொரியா போர் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. தென் கொரியா மற்றும் அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டி வருவதுடன் அதற்கான ஆயத்த வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் வளர்ந்த நாடுகள் என்றழைக்கப்படும் ஜி - 8 நாடுகளின் கூட்டம் லண்டனில் 2 நாட்கள் நடந்தது. அதில் அந்த நாடுகளின் வெளியுறவு துறை மந்திரிகள் கலந்து கொண்டனர். 

அப்போது வட கொரியா மீது ஜி 8 நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இது குறித்து அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஜான் கெர்ரி பேசும் போது வட கொரியா மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் கொரிய தீபகற்பத்தில் தேவையற்ற பதட்டம் நிலவுகிறது. மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்தினால் அந்த நாட்டின் மீது மீண்டும் பொருளாதார தடை விதிக்கப்படும் என்றார். 

இது போன்று ஜி -8 நாடுகளை சேர்ந்த வெளியுறவு மந்திரிகளும் வட கொரியாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். அதை தொடர்ந்து முடிவில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. 

இவை தவிர வட கொரியா தொடர்ந்து நடத்தும் அணு குண்டு சோதனை சர்வதேச நாடுகளின் அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே வட கொரியாவுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கொண்டு வந்துள்ள தீர்மானங்களுக்கு ஆதரவும் தெரிவிக்கப்பட்டது. வட கொரியா மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்தினால் அதன் மீது ஐ.நா. சபை கொண்டு வரவிருக்கும் பொருளாதார தடை தீர்மானத்திற்கு ஆதரவு தருவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் ஆலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியும் கலந்து கொண்டார். அப்போது புரட்சி நடைபெற்று வரும் நாடுகளின் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் நடைபெற்று வருவதாக கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும் சிரியாவில் பொதுமக்களை ராணுவம் கொன்று குவிப்பதற்கு எதிர்ப்பும் அதிருப்தியும் தெரிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்