முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் விசாரணையை கோர்ட் கண்காணிக்க வேண்டும்

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.27 -  ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவதை சுப்ரீம் கோர்ட் கண்காணிக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா தலைவர் பொன்ராதா கிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். 

பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று மதுரையில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்த மாநில தலைவர் பொன்ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது, ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரை விட இலங்கையின் ராஜபக்சே செயல்பாடுகள் மோசமாக இருந்துள்ளது. அப்பாவி தமிழர்களை கொலை செய்தது தொடர்பாக ஐ.நா. அமைப்பு ராஜபக்சேவை போர்குற்றவாளியாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் மத்தியஅரசும், காங்கிரஸ் கட்சியும் ராஜபக்சேவை காப்பாற்ற துணை போகிறார்கள். இது துரதிருஷ்வசமானது. இலங்கை தமிழர் படுகொலைக்கு காங்கிரஸ் கட்சியும், திமுகவும் தான் காரணம். மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் கும்பல் யாராக இருந்தாலும் அவர்களை மன்னிக்கக்கூடாது.

    அதே போல் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். சிபிஐ சுதந்திரமாக செயல்படவிட்டு அந்த விசாரணையை  உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். முழுமையான விசாரணை நடத்தப்பட்டால் திமுகவினரும், அவர்களுக்கு உதவியாக இருந்தவர்களின் விவரங்களும் வெளியே வரும். ஸ்பெக்ட்ரம் ஊழலை தவிர பல ஊழல்களிலும் இரு கட்சிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கனிமொழி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவரது பதவியை பறிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மூத்த தலைவர் லட்சுமணன், மாநில பொதுச்செயலாளர் சுரேந்திரன், மாவட்ட தலைவர் ராஜரத்தினம், சசிராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago