முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரணடைய அவகாசம்: சஞ்சய் தத் மனு இன்று விசாரணை

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.17 - சரணடைய கால அவகாசம் கோரும் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது.

கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் குண்டுவெடித்தனர். இந்த குண்டுவெடிப்பு வழக்கில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறி அவரது பெயரும் சேர்க்கப்பட்டது. ஆனால் குண்டுவெடிப்பு வழக்கில் அவருக்கு தொடர்பு இல்லை என்று மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துவிட்டது. அதேசமயத்தில் அவர் கள்ளத்தனமாக ஆயுதம் வைத்திருந்ததாகக்கூறி அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்தார். சுப்ரீம்கோர்ட்டும் 5 ஆண்டு தண்டனையை உறுதி செய்தது. இதில் சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் சிறைவாசத்தை சஞ்சய் தத் அனுபவித்துவிட்டார். மீதம் உள்ள மூன்றரை ஆண்டு கால தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று அவருக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் தண்டனையை அனுபவிக்க 4 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்றும் சஞ்சய் தத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தநிலையில் தாம் பல படங்களில் நடித்துக்கொண்டியிருப்பதாலும் படத்தயாரிப்பார்கள் அதிக அளவில் முதலீடு செய்திருப்பதால் அந்த படங்களில் நான் நடித்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும். இதைத்தடுக்க கோர்ட்டில் சரணடையும் காலத்தை நீட்டிக்குமாறு சுப்ரீம்கோர்ட்டில் சஞ்சய் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெறவிருந்தது. ஆனால் விசாரணையை ஒரு நாள் தள்ளிவைத்து இன்று விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!