முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை அஞ்சலி வழக்கு: களஞ்சியம் கோர்ட்டில் ஆஜர்

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்.20 - நடிகை அஞ்சலி மீது அவதூறு வழக்கு தொடர்ந்த டைரக்டர் களஞ்சியம் நேற்று சைதை கோர்ட்டில் ஆஜரானார். இதுகுறித்த விபரம் வருமாறு:- தமிழ்-தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகை அஞ்சலி சில நாட்களுக்கு முன் ஐதராபாத் ஓட்டலில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு அவர் மாயமானார். எங்கிருக்கிறார் என்று தெரியாததால் அஞ்சலி கடத்தப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

ஆனால் அஞ்சலி 4 நாட்களுக்கு பின் ஐதராபாத் போலீசில் ஆஜர் ஆகி தன்னை யாரும் கடத்தவில்லை. மன உளைச்சலால் ஓய்வு எடுத்தேன் என்று விளக்கம் அளித்தார்.

முன்னதாக நடிகை அஞ்சலி மாயமானதும் சென்னை பத்திரிகையாளர்களுக்கு டெலிபோனில் பேட்டி அளித்தார். அதில் தன்னை சித்தி பாரதிதேவி, டைரக்டர் களஞ்சியம் ஆகியோர் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இதனால் தனது உயிருக்கு ஆபத்து என்றும் தெரிவித்து இருந்தார்.

அஞ்சலியின் புகாரை மறுத்த டைரக்டர் களஞ்சியம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் மீது புகார் கொடுத்தார். மேலும் அஞ்சலி மீது சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கும் தொடர்ந்தார்.

மனுவில் அவர், நடிகை அஞ்சலி தனது குடும்ப பிரச்சினையில் தேவையில்லாமல் என்னை இழுத்து எனக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு குற்றச்சாட்டுகளை பரப்பி உள்ளார். எனவே அஞ்சலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து டைரக்டர் களஞ்சியம் கோர்ட்டில் ஆஜர் ஆனார். அவருடன் வக்கீல் ஜெயப்பிரகாசும் வந்திருந்தார்

மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட மாஜிஸ் திரேட்டு வருகிற மே 6-ந் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago