முக்கிய செய்திகள்

எகிப்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை இந்தியா அனுப்பியது

புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011      இந்தியா
EC 15

புதுடெல்லி,ஏப்.28 - எகிப்து நாட்டில் அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடக்கும்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இந்திய தேர்தல் கமிஷன் அனுப்புகிறது. இந்தியாவில் தேர்தல் நடத்தும் முறையைப்போலவே நடத்த எகிப்தும் விரும்புகிறது. மேலும் தேர்தலின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தையும் பயன்படுத்த எகிப்து அரசு முடிவு செய்திருக்கிறது. எகிப்தில் இந்தாண்டு இறுதிக்குள் அதிபர் தேர்தலும் பாராளுமன்ற தேர்தலும் நடக்கவுள்ளது. இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனை அடிப்படையில் பயன்படுத்த அந்த நாட்டு தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தியாவில் இருந்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களையும் பயிற்சியாளர்களையும் அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்திய தேர்தல் கமிஷன் குழு தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி தலைமையில் எகிப்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்தது. அந்த குழுவிடம் எகிப்து தனது விருப்பத்தை தெரிவித்தது என்று இந்திய தேர்தல் கமிஷன் இயக்குனர் ஜெனரல் அக்ஷாய் ரெளத் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: