டைனோசரின் படிமங்கள் மடகாஸ்கரில் கண்டுபிடிப்பு

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், ஏப். 23 - 9 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் படிமங்கள் மடகாஸ்கரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்கா கண்டத்துக்கு தென் கிழக்கே அமைந்துள்ள மாபெரும் தீவு மடகாஸ்கர். பண்டைய ஆய்வுகள், படிமங்கள் பற்றி ஆராய்பவர்களுக்கு மடகாஸ்கர் நாடு ஒரு பொக்கிஷமாகவே கருதப்படுகிறது. இங்கு பதிந்திருந்த டைனோசரின் படிமங்களை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். இந்த டைனோசர், சுமார் 9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இங்கு உளாவியதாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: