முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாஸ்டன் சம்பவம்: அண்ணனை கொன்ற தம்பி

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

 

பாஸ்டன், ஏப். 23 - அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மாராதான் போட்டியில் வெடிகுண்டு வைத்த சகோதரர்களில் ஒருவனை இன்னொருவனே காரை ஏற்றிக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. செசன்யா அருகே உள்ள ரஷ்ய பகுதியைச் சேர்ந்த தமேர்லான் சர்னயேவ் (26), ஷோக்கர் (19) இருவரும் குண்டு வைத்த விவகாரத்தில் தேடப்பட்டு வந்தனர். அப்போது பாஸ்டனின் வாட்டர்டவுன் பகுதியில் இரண்டு கார்களைக் கடத்தி அதில் தப்பிச் சென்ற இருவரையும் போலீசார் சுற்றி வளைத்தனர். இதையடுத்து காரில் இருந்து வெளியே குதித்த தமேர்லான் போலீசாரை நோக்கி சுடவே பதிலுக்கு போலீசார் சுட்டனர். இதில் படுகாயமடைந்த தமேர்லானுக்கு கைவிலங்கு மாட்ட போலீசார் நெருங்கிய போது இன்னொரு காரில் இருந்த ஷோக்கர் அதை மிக வேகமாக இயக்கி தனது அண்ணனையே காரை ஏற்றிக் கொன்று விட்டுத் தப்பினான். இதைத் தொடர்ந்து 48 மணி தேடுதல் வேட்டைக்குப் பின் வாட்டர்டவுன் பகுதியில் ஒரு படகில் பதுங்கியிருந்த ஷோக்கரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்