முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோச்சடையானில் இரட்டை வேடத்தில் ரஜினிகாந்த்

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப். 24 - கோச்சடையான் படத்தில் இரட்டை வேடங்களில் ரஜினி நடித்திருப்பது தெரியவந்துள்ளது. இப்படத்தின் டைரக்டரான ரஜினியின் மகள் சவுந்தர்யா தனது அதிகாரபூர்வமான இணையதளத்தில் இதனை வெளியிட்டுள்ளார். வரலாற்றை தழுவி எடுக்கப்படும் இப்படத்தில் அப்பா, மகன் வேடத்தில் ரஜினி நடிக்கிறார். சவுந்தர்யா இயக்கும் இந்த படத்தில் மோஷன் கேப்சர் 3 டி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே, ஷோபனா ஆகியோர் நடிக்கின்றனர். சரத்குமார், ஆதி, ஜாக்கிஷெராப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் இப்படம் அதாவது வரும் ஜூலையில் உலகம் முழுவதும் வெளியாகும் என்றும் தெரிகிறது. 2010 ம் ஆண்டில் வெளிவந்த எந்திரன் படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago