8 பேர் பலாத்காரம்: சிறுமி எய்ம்ஸ்-க்கு மாற்றம்

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்ரல்.24 - டெல்லியில் 8 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட13 வயது சிறுமி  தற்கொலை செய்ய முயன்றாள். உடனடியாக ஹெக்டேவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த சிறுமி அங்கிருந்து மாற்றப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டாள். 

இந்த பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாகவும், டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகவும் மனமுடைந்த அந்த 13 வயது சிறுமி தூக்க மாத்திரைகளைத் தின்று தற்கொலை செய்ய முயன்றாள்.

இந்த கடத்தல் சம்பவம் பற்றி  காவல் நிலையத்தில் அந்த சிறுமியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். அதில் தங்களது மகளை அவளது உறவினர் உள்பட 8 பேர் அவளை வலுக்கட்டாயமாக காசியாபாத்துக்கு கடத்திச் சென்று  பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: