எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஏப்.24 - மாநில முதல்வர்கள் மாநாட்டை வரும் ஜூன் 5-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் கூட்டுகிறது. இந்த மாநாட்டின்போது உள்நாட்டு பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
நாட்டில் காவல் துறையில் சீர்திருத்தம் செய்வது தொடர்பாக கடந்த 15-ம் தேதி மாநில முதல்வர்கள் மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் கூட்டியிருந்தார். இந்த மாநாட்டில் பெரும்பாலான முதல்வர்கள் கலந்துகொள்ளவில்லை. காங்கிரஸ் ஆட்சி செய்யும் கேரள மாநில முதல்வர் உம்மன்சாண்டி கூட மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.
இந்தநிலையில் முதல்வர்கள் மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சகம் வரும் ஜூன் 5-ம் தேதி மீண்டும் கூட்டியுள்ளது. இந்த மாநாட்டின்போது உள்நாட்டு பாதுகாப்பு குறித்தும் அதை கையாளுவது குறித்தும் விவாதிக்கப்படும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் தீவிரவாதம், உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், காவல் துறையை நவீனப்படுத்துதல் ஆகிய பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இந்த மாநாட்டின்போது மாநிலங்களில் தீவிரவாத எதிர்ப்பு மையம் அமைக்க முதல்வர்களை மத்திய அரசு வலியுறுத்தலாம் என்று தெரிகிறது. கடந்த முதல்வர்கள் மாநாட்டில் ஒடிசா, அசாம், உத்தரகாண்ட், திரிபுரா, அருணாசலப்பிரதேசம், மேகலாயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் மட்டும் கலந்துகொண்டனர். இவர்களைத்தவிர மாநில முதல்வர்கள் சார்பாக அமைச்சர்களும் கலந்துகொண்டனர். ஜார்க்கண்ட் மாநில கவர்னர் மற்றும் டெல்லி லெப்டினெட் கவர்னர் ஆகியோரும் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


