சமாஜ்வாடி கட்சித் தலைவர் சுட்டுக்கொலை

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013      அரசியல்
Image Unavailable

 

நொய்டா, ஏப். 27 - நொய்டா அருகே தர்பா கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சமாஜ்வாடி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சமன்பதி சுட்டுக் கொல்லப்பட்டார். சமன்பதியின் வீட்டுக்குள் நுழைந்த நபர்கள் அவரை சுட்டுக் கொன்றனர். அவரது பாதுகாவலர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த சமன்பதிக்கு கொலை மிரட்டல் இருந்தது. இதனால் அவருக்கு துப்பாக்கியேந்திய காவலர்கள் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் விடுமுறையில் சென்றிருந்த சமயத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். குற்றவாளிகளை கைது செய்ய கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அப்பகுதிக்கு சென்ற காவல் துறை கண்காணிப்பாளர் பிரிஜேஸ்குமார், அவர்களை சமாதானப்படுத்தி சமன்பதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: