முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் வழக்கு - அவகாசம் கேட்கும் சி.பி.ஐ.

புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, ஏப்.28 - ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக 3 வது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ. அவகாசம் கேட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் இதுவரை 2 குற்றப்பத்திரிக்கைகள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முதல் குற்றப்பத்திரிக்கை கடந்த 2ம் தேதியும், 2 வது குற்றப்பத்திரிக்கை 25ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. அடுத்து 3 வதாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ திட்டமிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை சி.பி.ஐ அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். ஸ்பெக்ட்ரம் முறைகேட்டிலம தொடர்புடைய மேலும் பல முக்கிய புள்ளிகளிடம் விசாரணை நடத்துவதுடன் மேலும் பல ஆதாரங்களை திரட்ட வேண்டியதுள்ளது. இந்த பணிகள் முடிந்தால் தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யமுடியும்.இதற்கு அதிக காலம் தேவைப்படுகிறது.ஆனால் வரும் மே 31ம் தேதிக்குள் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த குருகிய காலத்திற்குள் 3 வது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யமுடியாது. எனவே கூடுதல் அவகாசம் கேட்க சி.பி.ஐ முடிவு செயதுள்ளது. இதற்காக உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்ய உள்ளது. 

ஸ்பெக்ட்ரம் முறைகேடு  பணம் மொரிசியஸ், சைப்ரஸ், சிசேலஸ் போன்ற வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அவற்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் சி.பி.ஐ இறங்கியுள்ளது. இந்த வெளிநாடு தொடர்பான பணிகள் முடிய அதிக காலம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறைகேடுகளை கண்டுபிடித்த பின்னர் மேலும் பல துணை குற்றப்பத்திரிக்கைகளை சி.பி.ஐ. தாக்கல் செய்ய உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago