முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதி பற்றாக்குறை: ஊழியர்களுக்கு 7 மாத ஊதியமில்லை!

வெள்ளிக்கிழமை, 3 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மே. 4 - நலிவடைந்துள்ள 8 பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் முதல் சம்பளமே வழங்கவில்லை என்று மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் பிரபுல் பட்டேல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பிரடிபுல் பட்டேல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டிருப்பதாவது, ஹெச்.எம்.டி வாட்ச்சஸ், ஹெச்.எம்.டி. சினர் வாட்ச்சஸ், ஹெச்.எம்.டி. பேரிங்ஸ், திரிவேணி ஸ்ட்ரக்சுரல்ஸ், துங்கபத்ரா ஸ்டீல் புராடக்ட்ஸ், என்.இ.பி.ஏ., ஹிந்துஸ்தான் கேபிள்ஸ் மற்றும் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் ஆகிய 8 நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. 

எனவே, கனரக தொழில் துறையின் கீழ் இயங்கும் இந்த பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாட்டுக்கான நிதியை திரட்ட முடியாத சூழல் உள்ளது. இதனால் இதன் ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. ஊழியர்களின் சம்பள பாக்கியை வழங்குவதற்காக நலிந்த நிறுவனங்களுக்கு அவ்வப்போது திட்டமில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. 

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான சம்பள பாக்கியை வழங்குவதற்காக ரூ. 81.92 கோடி வழங்க மார்ச் மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 2012-13 நிதியாண்டில் கனரக தொழில் துறையின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களின் ஒட்டுமொத்த உற்பத்தி ரூ. 56,506 கோடியாக அதிகரித்துள்ளது. 2011-12 ல் இது ரூ. 56,009 கோடியாக இருந்தது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago